நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Periyar E. V. Ramasamy Tamil nadu
By Sumathi Sep 17, 2022 06:04 AM GMT
Report

பெரியாரின் 144வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பெரியார் பிறந்தநாள்

பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சாதிய பாகுபாட்டினை கண்டு சமூக நீதி காத்திட தொடர்ந்து போராடியவர்.

நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை  -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Periyar Birthday Chief Minister Mkstalins Tribute

ஆணும் , பெண்ணும் சமம் என்பதை அடிப்படை கொள்கையாகக் கொண்டு சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு, ஆகியவற்றிற்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். சமூக நீதியை நிலை நாட்டுவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் திகழ்வதற்கு வழிகாட்டியாக இருந்தவர்.

மு.க.ஸ்டாலின் மரியாதை

தனது இறுதி மூச்சு வரை சுயமரியாதை கொள்கைக்காகவே வாழ்ந்தவர். தமிழ்நாட்டில் சமூக மாற்றத்தை உருவாக்கி மக்களிடையே ஒற்றுமையை வளர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பெரும் பங்காற்றியவர்.

நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை  -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Periyar Birthday Chief Minister Mkstalins Tribute

இந்நிலையில் சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

பெரியார் உலகம்

அதனைத் தொடர்ந்து திருச்சி, சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு மு. க ஸ்டாலின் சென்னை, பெரியார் திடலில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். சிறுகனூரில் 30 ஏக்கர் பரப்பளவில், நூலகம், ஆய்வகங்களுடன் 'பெரியார் உலகம்' அமைக்கப்படுகிறது.

பெரியார் உலகில் 95 அடி உயர பெரியார் சிலை நிறுவப்பட உள்ளது. பின்னர் பேசிய முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் கூறியதாவது ; ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூக நீதியின் தலைமையகம் பெரியார் திடல்.பெரியார் திடல் எனது தாய் வீடு.

பெரியார் திடல் வரும்போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன். தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் இருந்து வருகிறது. நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான் என கூறினார்.