வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Aug 26, 2022 11:42 AM GMT
Report

திராவிட மாடல் இந்தியாவுக்கு வழிகாட்டும் அரசாக செயல்படுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

ஈரோடு பெருந்துறை பகுதியில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது ம் இதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் ரூ183.70 கோடி மதிப்பில் 1,761 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Dravidian Model To Guide Mkstalin

பின்னர் அங்கு சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பெருந்துறை அருகே திங்களூரில் பாண்டியர் ஆட்சிகாலத்தில் தமிழ் சங்கம் இருந்ததாக ஒரு செப்பேடு கூறுகிறது. சேரனை சோழன் வென்ற இடம் இந்த பெருந்துறை.

திராவிட மாடல் அரசு

சிறை வைக்கப்பட்ட சேரனை மீட்க புலவர் பாடியது தான் களவழி நாற்பது என்ற நற்றமிழ் நூல். யானைப் போர்களை நினைவூட்டும் கோட்டை கோவில்கள் இருக்கக்கூடிய பகுதி இந்த பகுதி எனக் கூறிய முதலமைச்சர் திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கு வழிகாட்டும் அரசாக செயல்பட்டு வருகிறது.

மாநில சுயாட்சி அதிகாரம் திராவிட மாடல் ஆட்சியாக உள்ளது. நமது ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சி அடைந்து உள்ளனர். நான் உங்களில் ஒருவனா உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். உங்கள் அன்போடும் ஆதரவோடும் இலக்கை நோக்கி செல்வேன். உங்கள் ஆதரவுடன் நான் வெற்றி பெறுவேன் எனக் கூறினார்.