எம்பி கணேசமூர்த்தி விபரீத முயற்சி; கெடு வைத்த டாக்டர்ஸ் - துரை வைகோ உருக்கம்!
எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
எம்பி கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி எம்பியாக உள்ளவர் கணேச மூர்த்தி. மதிமுகவின் பொருளாளராகவும் பணியாற்றி வந்தார்.
2019ல் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.
அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், திடீரென அவர் பூச்சி மருந்தை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துரை வைகோ உருக்கம்
அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது, கணேசமூர்த்தியின் உடல்நலம் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் மருத்துவர்களை சந்தித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, துரை வைகோ கணேசமூர்த்தியை பார்த்து திரும்பினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலமின்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார். உடல் நிலை சீராக இருந்தாலும் இப்போது எக்மோ சிகிச்சை கொடுத்து வரப்படுகிறது.
24-48 மணி நேரம் கடந்து தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.