துரை தயாநிதி திடீரென மருத்துவமனையில் அனுமதி; ஓடோடி சென்ற ஸ்டாலின் - என்னாச்சு?
துரை தயாநிதி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துரை தயாநிதி
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி(36). திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திடீரென உடல்நிலை காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அடுத்த சில நாட்களுக்கு துரை தயாநிதிக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின் சந்திப்பு
தொடர்ந்து, துரை தயாநிதியை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அண்ணன் அழகிரியிடமும் இதை பற்றி விசாரித்துள்ளார்.
பரிசோதனையில், அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், மூளை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்துள்ளது. மூளைக்கு செல்லும் ரத்த நரம்புகளில் அடைப்பு இருப்பதால், இதை பிரைன் அட்டாக் என்று சொல்லப்படுகிறது.
முன்னதாக திடீரென மயங்கி விழுந்ததன் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கிடையில் மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கிய மக்களுக்கு உதவிகளை அவர் செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.