அரைவேக்காடு அண்ணாமலை.. இழிவு பேச்சு, மக்களின் வெறுப்பிற்கு ஆளாவார் - கே. எஸ். அழகிரி காட்டம்!

Indian National Congress Periyar E. V. Ramasamy BJP K. Annamalai
By Vinothini Nov 11, 2023 05:16 AM GMT
Report

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணாமலை குறித்து பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஶ்ரீரங்கத்தில், "தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி வரும்பொழுது முதல் வேளையாக அந்த கம்பத்தை அப்புறப்படுத்துவது; நம்முடைய ஆழ்வார்களில் இருந்து நாயன்மார்களில் இருந்து அவர்களுடைய சிலைகள் அங்கே வைக்கப்படும். தமிழ்ப் புலவர்களுடைய சிலைகள் வைக்கப்படும்.

ks-alagiri-slams-bjp-chief-annamalai

கடவுளை நம்புகிறவன் முட்டாள் என சொல்லக் கூடிய சிலையை பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே தமிழகத்தில் இருக்கிற அனைத்து கோவில்களிலும் அகற்றிக் காட்டும்" என்று தந்தை பெரியாரை எதிர்த்து கூறியுள்ளார். இதற்கு பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எதிராக வழக்கு.. செயலாளருக்கு நோடீஸ் - உச்சநீதிமன்றம் அதிரடி!

ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எதிராக வழக்கு.. செயலாளருக்கு நோடீஸ் - உச்சநீதிமன்றம் அதிரடி!

கே.எஸ்.அழகிரி

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர், "தமிழக அரசியல் வரலாற்றை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பை வரலாற்று நூல்கள் மூலம் அறிந்து கொண்டு பேசுவது நல்லது.

ks-alagiri-slams-bjp-chief-annamalai

அண்ணாமலையின் இத்தகைய பேச்சுகள் வருகிற 2024 மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே உதவப் போகின்றன. எனவே, தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், கருணாநிதி ஆகியோர் குறித்து மிக மிக இழிவான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்துகிறார்.

தந்தை பெரியார் காங்கிரசை 1952 தேர்தலில் 60 அடி குழிதோண்டிப் புதைப்பேன் என்று பேசியதாக அண்ணாமலை புலம்பியிருக்கிறார். எந்த பெரியார் 1952 தேர்தல் பரப்புரையில் அத்தகைய கருத்தைக் கூறினாரோ, இரண்டு ஆண்டுகள் கழித்து 1954 ஏப்ரல் 13 அன்று தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் பொறுப்பேற்ற செய்தி கிடைத்தவுடனே அதை ஆதரிக்கத் தொடங்கினார். இதனை அரைவேக்காடு அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை" என்று தெரிவித்துள்ளார்.