தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்..?செல்வப்பெருந்தகையா அல்லது ஐஏஎஸ் சசிகாந்தா?

Indian National Congress Tamil nadu Chennai
By Karthick Aug 16, 2023 07:18 AM GMT
Report

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இன்று மாற்றப்படவுள்ளார் என்ற தகவல்கள் வெளிவரும் நிலையில், அடுத்த தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி  

tn-congress-to-have-a-new-leader

தமிழகத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வருபவர் கே.எஸ்.அழகிரி. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இவர் இந்த பதவியில் இருந்து வருகிறார். பல சறுக்கல்களையும், சவால்களையும் தமிழக காங்கிரஸ் அண்மைகாலமாக சந்தித்து வருகிறது.

 இந்நிலையில், கட்சியின் மாநில தலைவரை மாற்றும் எண்ணத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக இருந்து வருபவர் செல்வப்பெருந்தகை.அவரே அடுத்த தலைவராகப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

tn-congress-to-have-a-new-leader

ஐபிஎஸ் சசிகாந்த்

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதான எதிர்கட்சியான பாஜக இளம் தலைவராக அண்ணாமலையை நியமித்து பணியாற்றி வரும் நிலையில், அதனை சமாளிக்க காங்கிரஸ் தரப்பில் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான சசிகந்த நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

tn-congress-to-have-a-new-leader

வரும் 2024-ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் காரணத்தால், தேர்தல் நெருக்கடி காரணமாக தலைவர் மாற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.  காங்கிரஸ் வட்டாரத்தில் நிச்சயமாக அடுத்த தலைவராக செல்வப்பெருந்தகையே நியமிக்கப்படுவர் என கூறப்பட்டு வருகின்றது.