அப்பாக்கு தலைவர்னா கலைஞர் தான்!!அம்மா-சித்தி நடுவுல பிரச்சனை?? உடைத்து பேசிய முக அழகிரி மகள்!!
திமுகவில் தற்போதும் திரும்புவரா? என்று திமுகவின் தொண்டர்கள் எதிர்பார்த்திருக்கும் ஒரே நபராக இருப்பவர் முக அழகிரி.
முக அழகிரி
தென் தமிழகத்தை திமுகவின் கோட்டையாக மாற்றி பெரும் ஆதிக்கத்தை செலுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், மத்திய அமைச்சருமான முக அழகிரி. தொடர்ந்து கட்சி பணியில் ஈடுபட்டு வந்த முக அழகிரி, 2014 ஆம் தேதியன்று கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு, திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
தற்போதும் தென் தமிழகத்தில் முக அழகிரியை மீண்டும் கட்சியில் இணைத்திட வேண்டும் என திமுகவின் தொண்டர்கள் பலரும் வலியறுத்தி வருவதை வெளிப்படையாக காணமுடிகிறது. ஆனால் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணிகள் ஏதும் நடப்பதாக தற்போது வரை தெரியவில்லை.
அப்பா ரொம்ப எமோஷனல் ஆகிட்டாரு
மீடியா வெளிச்சத்தில் இருந்து தற்போதும் ஒதுங்கி இருந்து வரும் முக அழகிரி குறித்து அவரது மகள் கயல்விழி சமீபத்திய பேட்டியில் பல தகவல்களை தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், அப்பாவை கட்சியை விட்டு நீக்கிய போது அப்பா கோபாலபுரம் வீட்டுக்கு சென்று தாத்தா கருணாநிதியை சந்தித்தார், அப்போது இருவரும் ரொம்ப எமோஷனல் ஆகி கட்டிபிடித்து அழுதுவிட்டார்கள் என்றார்.
கட்சியை விட்டு நீக்கிய போது அப்பா உடைந்து போய்விட்டார் என்ற கயல்விழி, தாத்தா இப்படி செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை என்றும் அப்பாவிற்கு இன்னும் அந்த வருத்தம் இருக்கிறது என்றார்.
மேலும், வெளியில் பலரும் அம்மாவிற்கும் சித்திக்கும் இடையே பல பிரச்சனைகள் இருப்பதாக கூறிய வருவதை பற்றி பேசிய அவர், அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என்றும், தற்போதும் இருவரும் நல்ல உறவில் தான் உள்ளார்கள் என்றார்.
மீண்டும் தாத்தாவுடன் சுமுக உறவில் ஈடுபட முயன்ற நேரத்தில் தாத்தா இறந்ததால் அப்பாவுக்கு நிறைய வருத்தம் இருக்கிறது என அந்த பேட்டியில் குறிப்பிட்ட கயல்விழி, திமுக ஆட்சிக்கு வந்ததில் அப்பாவுக்கு சந்தோஷம்தான் என்றும் அப்பாவை பொருத்தமட்டில் எப்போதும் தலைவர் என்றால் அது கலைஞர்தான் என்றும் வேறு எந்த கட்சியிலும் சேர அப்பா விரும்பவில்லை என்றார்.