இந்த 5 ஆவணங்கள் கொடுத்தால் போதும் - இனி.. ஈஸியா துபாய் போகலாம்!

Dubai
By Sumathi Mar 07, 2024 12:18 PM GMT
Report

புதிய விசா செயல்முறையை ஐக்கிய அமீரகம் கொண்டு வந்துள்ளது.

 துபாய்

ஐக்கிய அமீரகம் வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாகவும் விரைவாகவும் மாற்ற Work Bundle என்ற புதிய தளத்தை ஆரம்பித்துள்ளது. இது துபாயில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பெரியளவில் உதவியாக இருக்கும்.

dubai

இதற்கு முன்பு இருந்த முறையில் பணி அனுமதி மற்றும் தங்குவதற்கான விசாக்கள் பெற 30 நாட்கள் வரை ஆகும். அதற்கு 16 வகையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இனி, ஐந்து நாட்களில் துபாய் விசா பெற முடியும். ஐந்து ஆவணங்கள் மட்டுமே தேவை.

முன்பு விசா பெறக் குறைந்தது 7 முறை விசா மையங்களுக்கு வரவேண்டும் என சூழ்நிலை இருந்த நிலையில், அது 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒர்க் பண்டில் என்ற இந்தத் தளம் அரசு நடைமுறைகளை எளிமையாக்கும்.

இந்தியாவிற்கு ஐ.நாவில் இடமில்லாதது அபத்தம்; எலான் மஸ்க் திடீர் ஆதரவு - உற்றுநோக்கும் உலக நாடுகள்!

இந்தியாவிற்கு ஐ.நாவில் இடமில்லாதது அபத்தம்; எலான் மஸ்க் திடீர் ஆதரவு - உற்றுநோக்கும் உலக நாடுகள்!

புதிய விசா செயல்முறை

விரைவாகத் துபாயில் வந்து தங்கும் செயல்முறையை விரைவானதாக மாற்றும். இதன் முதற்கட்டம் "Invest in Dubai" தளம் மூலம் துபாயில் செயல்படுத்தப்படும். அதேபோல மற்ற அரசு டிஜிட்டல் தளங்களும் இதில் படிப்படியாகச் சேர்க்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 5 ஆவணங்கள் கொடுத்தால் போதும் - இனி.. ஈஸியா துபாய் போகலாம்! | Dubai Simplifies Work Visa Process 5 Documents

மேலும், இந்த செயல்முறையில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்கள் இந்த அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஹெச்.ஆர் துறை, குடியுரிமை அமைச்சகம், ஃபெடரல் ஆணையம், வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் என பல்வேறு அமைச்சகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

துபாயில் ஏற்கனவே இந்தியர்களுக்கு 5 ஆண்டுகள் சுற்றுலா விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.