உலகிலேயே மிக பெரிய புதிய விமான நிலையம் - எங்கே வரப்போகுது தெரியுமா?
உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் அமைய உள்ளது.
விமான நிலையம்
துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம், தனது எக்ஸ் பதிவில் முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதில், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் கட்டமைக்க 128 பில்லியன் திர்ஹம் (2.9 லட்சம் கோடி) மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய பணிகள் முனையம், துபாய் சர்வதேச விமான நிலையத்தை விட ஐந்து மடங்கு பெரியதாகவும், பயணிகளை கையாளும் திறன் கொண்டதாகவும் இருக்கும். இந்த புதிய விமான நிலையம், 26 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.
பிரம்மாண்ட திட்டம்
வரும் ஆண்டுகளில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் அல் மக்தூம் விமான நிலையத்திற்கு மாற்றப்படும். புதிய அல் மக்தூம் விமான நிலையத்தில் 400 டெர்மினல் கேட்கள் மற்றும் ஐந்து ஓடுதளங்கள் உடன் இருக்கும்.
.@HHShkMohd approves the designs for the new passenger terminal at Al Maktoum International Airport, and commencing construction of the building at a cost of AED 128 billion. pic.twitter.com/kBsP8nCa6g
— Dubai Media Office (@DXBMediaOffice) April 28, 2024
துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனமான ஃப்ளை துபாய் ஆகியவை இந்த புதிய விமான நிலையத்தை தங்கள் மையமாகக் கொள்ளும்.
உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் துபாயுடன் இணைவதற்கான புதிய மையமாகவும் இது இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.