சர்வதேச விமான நிலையத்தில் ஒளிப்பரப்பான ஆபாச படம் - பயணிகள் அதிர்ச்சி!

Brazil
By Swetha Subash May 29, 2022 05:11 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

பிரேசில் நாட்டின் மிகப்பெரிய கடற்கரை நகரமான ரியோ டீ ஜெனிரோ நகரில் சர்வதேச விமான நிலையம் நேற்று முன்தினம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

அப்போது விமான நிலையத்தில் விமானங்கள் வருகை குறித்த தகவல்களை அறிவிக்கும் டிஜிட்டல் திரையில் திடீரென ஆபாச பட காட்சிகள் ஒளிப்பரப்பாக தொடங்கின.

சர்வதேச விமான நிலையத்தில் ஒளிப்பரப்பான ஆபாச படம் - பயணிகள் அதிர்ச்சி! | Porn Scenes Displayed At Brazil Airport

இதை கண்ட பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், சில பயணிகள் ஆபாச படங்கள் ஓடிய திரையை பார்த்து சிரித்தபடி நகர்ந்து சென்றனர். ஆனால் பெரும்பாலானோரை இந்த சம்பவம் முகம் சுளிக்க வைத்தது.

சர்வதேச விமான நிலையத்தில் ஒளிப்பரப்பான ஆபாச படம் - பயணிகள் அதிர்ச்சி! | Porn Scenes Displayed At Brazil Airport

பலர் தங்கள் கண்களை மூடிக்கொண்டனர். மேலும் தங்கள் குழந்தைகள் திரையை பார்க்கவிடாமல் மறைத்துக்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ஹேக்கர்கள் விமானநிலையத்தின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து விளம்பர திரையில் ஆபாச படங்களை ஒளிபரப்பி இருக்கலாம் என கருதப்படுகிறது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.