ஒரு வருஷ மழை ஒரே நாளில்; தத்தளிக்கும் துபாய், 18 பேர் பலி - மிதந்த விமான நிலையம்!
வரலாறு காணாத கன மழையால் துபாய் தத்தளித்து வருகிறது.
கனமழை
வளைகுடா நாடுகளுக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச விமான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதன் காரணமாக சென்னையில் இருந்து துபாய், குவைத், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட வேண்டிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களிலும் முழங்கால் அளவு வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள், ரயில்கள் ஆகிவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
18 பேர் பலி
துபாய் மால், அமீரக மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியே நீர் உள்ளே புகுந்தது. கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Dubai Airport right now
— Science girl (@gunsnrosesgirl3) April 16, 2024
pic.twitter.com/FX992PQvAU
ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பொழிந்துள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால், சேத அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.