ஆரவாரமே இல்லை.. துபாய் இளவரசிக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

Dubai Marriage
By Sumathi Apr 23, 2023 05:20 AM GMT
Report

துபாய் இளவரசிக்கு திருமணம் நடைபெற்றதாக அரசு குடும்பம் உறுதிபடுத்தியுள்ளது.

துபாய் இளவரசி

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட மாகாணங்கள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முஹம்மது பின் ராஷித்தின் கட்டுப்பாட்டில்தான் துபாய் உள்ளது. இவர் இளவரசி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

ஆரவாரமே இல்லை.. துபாய் இளவரசிக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா? | Dubai Princess Sheikha Mahra Married Billionaire

இவருக்கும், ஷேக் மனா பிப் முஹம்மது பின் ராஷித் என்பவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அரபு முறைப்படி திருமணம் நடைப்பெற்றுள்ளது. இதில், அரச குடும்பத்தினர், அமைச்சர்கள், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

திருமணம்

மஹ்ரா பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளுக்கான பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் மஹ்ராவுக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர். இவரை திருமணம் செய்து இருக்கும் ஷேக் மனா மிகப்பெரும் கோடீஸ்வரராம்.

ஆரவாரமே இல்லை.. துபாய் இளவரசிக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா? | Dubai Princess Sheikha Mahra Married Billionaire

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் இடர் மேலாண்மையில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் தான் அமீரகம் முழுவதும் நிறைந்திருக்குமாம். இவரது தந்தை ஷேக் முஹம்மது பின் ராஷித் பின் மனா அல் மக்தூம் துபாயின் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளார்.