ஓபிஎஸ் பதவி காலாவதியானது : சிவி சண்முகம்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jun 24, 2022 08:01 AM GMT
Report

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் :

ஒருங்கிணைப்பாளர் அழைப்பின் பேரிலேயே கூட்டம் நடைபெற்றது 

நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்தில் ஒரு பங்கு பேர் கையொப்பமிட்டு கொடுத்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டப்படும். கட்சி சட்ட திட்டங்களை இயற்றவும் திருத்தும் செய்யவும் அதிகாரம் கொண்டது அதிமுக பொதுக்குழு.

அதிமுக கட்சி பதவிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விதிகள் ஏதும் இல்லை.

ஓபிஎஸ் பதவி காலாவதியானது : சிவி சண்முகம் | Dual Leadership Expires Cv Shanmugam

அனைத்து கட்சி தேர்தல் முடிவுகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையாக தெரிவிக்கப்பட்டது தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், அதிமுகவில் அனைத்து பதவிகளும் 5 ஆண்டு காலம் தான். ஓபிஎஸ்-சின் ஒருங்கிணைப்பாளர், ஈபிஎஸ்-சின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது.

அங்கீகாரம் பெறாததால் காலாவதியானது

ஏற்கனவே திருத்தப்பட்ட சட்டவிதிகளுக்கு நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் காலாவதியானது என தெரிவித்தார். அதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அந்த பதவிகள் கலவாதியாகின.

ஓபிஎஸ் பதவி காலாவதியானது : சிவி சண்முகம் | Dual Leadership Expires Cv Shanmugam

காலாவதியானதால் ஓபிஎஸ் பொருளாளர், ஈபிஎஸ் தலைமை நிலைய செயலாளராக தொடருவார் என்றும் 2017-ஆம் ஆண்டு ஓபிஎஸ்க்காக அதிமுக விதியில் திருத்தம் செய்யப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

“கருவாடு கூட மீனாகலாம்; அதிமுகவில் சசிகலா ஒருநாளும் உறுப்பினராக முடியாது” – சிவி சண்முகம் ஆவேசம்!