“கருவாடு கூட மீனாகலாம்; அதிமுகவில் சசிகலா ஒருநாளும் உறுப்பினராக முடியாது” – சிவி சண்முகம் ஆவேசம்!
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து சசிகலா விடுதலையானார். அன்றிலிரந்தே சசிகலா பேச்சு தான் அவ்வப்போது வந்துக்கொண்டே இருக்கிறது.
சசிகலா அரசியலில் ஒதுங்கி ஆன்மீக பயணத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார். அதனையடுத்து, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை தழுவியது.
தற்போது சசிகலா தொண்டர்களிடையேயும், அதிமுகவினரிடையேயும் பேசி வருவதாக ஆடியோக்கள் வெளி வந்துக்கொண்டிருப்பதால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.
Gonna be a Vanniyar Vs Devar trifle in Social media.
— UmaMaheshwaran Panneerselvam (@UMA_1510) February 11, 2021
Phew. pic.twitter.com/j9VvIy3htK
இதுதொடர்பாக சிவி சண்முகத்திடம் செய்தியாளர்களிடம் பேசியதாவது -
இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே யாருக்கும் தெரியாது. அவருக்கும், அதிமுகவின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே கிடையாது.
அவர் ஜெயலலிதாவின் வீட்டிலே, அவருக்கு உதவியாளராக இருந்து வந்தார். அவ்வளவுதான். அவருக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் இப்போது என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்கப்போவது இல்லை.
எங்கள் மூத்தவர் காளிமுத்து, கருவாடு மீன் ஆகாது என்று சொன்னார். இது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த வசனம். கருவாடு கூட மீனாகிவிடலாம். ஆனால், அதிமுகவில் சசிகலா ஒருநாளும் உறுப்பினராக முடியாது.
ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் இந்த இயக்கத்தை அசைக்கவோ, ஆட்டவோ யாராலையும் முடியாது. ஒரு சசிகலா அல்ல ஆயிரம் சசிகலா வந்தாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. டிடிவி தினகரனுக்கு என்ன தெரியும், ஊத்திக்கொடுக்கத்தான் தெரியும், டிடிவி தினகரன் தான் எனக்கு ஊத்திகுடுத்தாரு. ஏன்னா அது டிடிவி தினகரனோட குலத்தொழில் அதான்.
ஊத்தி ஊத்திக்கொடுத்தே குடிய கெடுத்தவனுங்க. கூவத்தூர்ல அது மாறி தான் ஊத்தி கொடுத்தார். இல்லைனு சொல்ல சொல்லு அவர.
இவ்வாறு கடுமையாக விமர்சித்து பேசினார்.