முடி உதிர்வை தடுக்கவே முடியலையா? இந்த 7 உலர் பழங்கள் சாப்பிட்டால் போதும்!
முடி உதிர்வை தடுப்பதற்கு இந்த 7 பழங்கள் சாப்பிடுங்கள்.
தலைமுடி உதிர்வு
சமீப காலமாக உணவுமுறை மற்றும் மாசுபாடு போன்ற காரணத்தால் பெரும்பாலானோருக்கு முடி உதிர்வு பிரச்சனை உள்ளது. இப்பொழுந்தெல்லாம் இளம் வயதினருக்கு கூட முடி உதிர்வு பிரச்சனை வருகிறது, பின்னர், சிறு வயதிலேயே இளநிறை போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.
போதுமான ஊட்டச்சத்து உணவுகள் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான மற்றும் அழகிய முடி வளச்சிக்கு உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் உங்கள் முடி உதிர்வை கட்டுப்படுத்த ஊட்டச்சத்து மிக்க உணவில் கவனம் செலுத்தி சாப்பிடுவது முக்கியம்.
உலர் பழங்கள்
இந்நிலையில், முடி உதிர்வை தடுக்க உதவும் இந்த 7 உலர் பழங்களை சாப்பிட்டால் பலனளிக்கும். அதில் உலர் திராட்சை இரும்பின் இயற்கை மூலமாகும். இது உச்சந்தலையில் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை பராமரிக்கவும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. முந்திரி, துத்தநாகம் நிரம்பியுள்ள முந்திரியில் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிப்பதிலும், முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வால்நட் பருப்பில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் பயோட்டின் உள்ளது. இது முடியை வலுப்படுத்தவும் முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவுகிறது.
பேரீச்சம்பழம், இதில் உள்ள வைட்டமின் பி மற்றும் இரும்புசத்து உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்க உதவும். பிஸ்தா பிஸ்தா, இதில் வைட்டமின் ஈ உள்ளது முடி ஆரோக்கியத்திற்கு உதவும். பாதாம் மற்றும் பிரேசில் நட்ஸ் முடிக்கு உதவும்.