அதிரடி சரவெடி தான்.. ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் - எவ்வளவு தெரியுமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
அரசு ஊழியர்கள்
தீபாவளி பண்டிகை நாள் நெருங்கி வருவதால் அரசு ஊழியர்கள் இடையே போனஸ் குறித்த ஆர்வம் எழுந்துள்ளது. இந்த போனஸ் அறிவிப்பு எப்பொழுது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே இந்த தீபாவளி போனஸ் குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
போனஸ்
இந்நிலையில், 'சி' பிரிவு & கெசட் ரேங்க் இல்லாத 'பி' பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பின்னர், துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
The central government has approved a Diwali bonus for Group C and non-gazetted Group B rank officials, including paramilitary forces, with a maximum limit of Rs 7,000. (n/1) pic.twitter.com/IK0if6Swxh
— Press Trust of India (@PTI_News) October 17, 2023
ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கையும் வெளியிட்டுள்ளது.