முடி உதிர்வை தடுக்கணுமா...உடனே இந்த முறையை ட்ரை பண்ணுங்க...

healthtips hairlosstips முடிஉதிர்வைதடுக்க முடிஉதிர்வுக்குதீர்வு
By Petchi Avudaiappan Apr 12, 2022 04:28 PM GMT
Report

முடி உதிர்தல் என்பது பொதுவாக அனைத்து வயதினரும் சந்திக்கும் பிரச்சனை தான். இதற்கு காரணமாக பல்வேறு காரணிகள் கூறப்பட்டாலும், பிரச்சனை  தீவிரமாகும் போது அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் சிக்கல் தான்..!

  • முடி உதிர்வை தடுக்க லீன் புரோட்டின்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவை சேர்க்கலாம்.இவை வைட்டமின்கள் பி,  அமினோ அமிலங்கள், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்றவற்றை வழங்கி முடிக்கு ஊட்டம் அளிக்கிறது.
  • தலைமுடியை தொடர்ந்து இழுப்பது கடுமையான பக்கவிளைவுகளை உண்டாக்கலாம். எனவே எப்போதும் முடியை இழுத்து விதவிதமான ஹேர்ஸ்டைலை மாற்றினாலும் அதனை தளர்வாக வைப்பது சிறந்தது. 
  • வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரை உச்சந்தலையில் பயன்படுத்த வேண்டும். இது தலைமுடியை ஈரப்பதத்தில் தக்கவைத்து பளபளப்பாக்கும். அதேபோல் அதிக ஷாம்பு பயன்படுத்துவது வறட்சியை ஏற்படுத்தி அதிக முடி உதிர்வை உண்டாக்கலாம். 
  •  6-8 வாரங்களுக்கு ஒரு முறை முடியை வெட்டி விட வேண்டும். அதேசமயம் கூந்தல் பராமரிப்பில் உள்ள சல்பேட்ஸ், பாராபென்ஸ் மற்றும் ஆல்கஹால் கொண்ட  பொருள்கள் உங்கள் தலைமுடியை வறட்சியடைய செய்யலாம். இதனால் இயற்கை பொருள்களை பயன்படுத்த முயற்சியுங்கள். 
  • மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தையும் சீர் குலைத்து கூந்தல் ஆரோக்கியத்திலும்  பிரச்சனையை ஏற்படுத்தலாம்.