நீ என்ன சொல்றது, நானே செய்றேன்.. தலைக்கேறிய போதையில் கணவர் செய்த காரியம் - அதிர்ச்சி!

Attempted Murder Crime Death Chengalpattu
By Vinothini Oct 14, 2023 12:48 PM GMT
Report

இளைஞர் ஒருவர் தனது மனைவியை எரித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதை

செங்கல்பட்டு மாவட்டம், கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் 28 வயதான இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தினி (25 வயது) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார், இந்த பெண் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

drunken-husband-burnt-his-pregnant-wife

ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார், இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினமும் பகலிலேயே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

வேறு சாதி வாலிபருடன் காதல்.. பெற்ற மகளின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற தந்தை - அதிர்ச்சி!

வேறு சாதி வாலிபருடன் காதல்.. பெற்ற மகளின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற தந்தை - அதிர்ச்சி!

கொலை

இந்நிலையில், நந்தினி நீ குடித்துவிட்டு வந்தால் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கணவரை மிரட்டியுள்ளார். அப்பொழுது தலைக்கேறிய போதையில் இருந்த அவரது கணவர், நீ என்ன தற்கொலை செய்து கொள்வது, நானே உன்னை எரித்து விடுகிறேன் என கூறி வீட்டில் இருந்த மண்ணென்ணெயை எடுத்து நந்தினி மேல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு மகனை தூக்கி சென்றுள்ளார்.

drunken-husband-burnt-his-pregnant-wife

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.