தாய்ப்பால் கொடுப்பதை வீடியோ எடுத்த முதியவர், கொன்று வீசிய இளைஞர்கள் - கொடூரம்!
முதியவர் ஒருவர் பெண் தாய்ப்பால் கொடுப்பதை வீடியோ எடுத்ததால் நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர கொலை
கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே கே.கே.புதூர் பகுதியில் உள்ள சாக்கடையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர், போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.
அப்பொழுது அந்த கேகே புதூர் பகுதியைச் சேர்ந்த முஸ்தாக் என்பது தெரிய வந்தது, 58 வயதான அவர், தனியார் ஷோரூமில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது உடலில் பல காயங்கள் இருந்துள்ளது, அதனால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதியவர் செய்த கேவலம்
இந்நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அது கொலை என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் அதே பகுதியை சேர்ந்த ராகுல் (24), மணிகண்ட மூர்த்தி (26), மனோஜ் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், விசாரணையில், கேகே.புதூர் பகுதியில் 24 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார்.
அவரது மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்பொழுது அந்த முதியவர் அதனை வீடியோ எடுத்துள்ளார். இதனை அறிந்த மனைவி அலறியுள்ளார், இதனால் அங்கு வந்த இளைஞர்கள் 3 பேர் அந்த முதியவரை அடித்து கடுமையாக தாக்கி சாக்கடையில் வீசியுள்ளனர் என்று தெரியவந்தது. இதனால் போலீசார் அந்த 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.