ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்!

India Draupadi Murmu World
By Swetha Aug 07, 2024 03:17 AM GMT
Report

திரவுபதி முர்முவுக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்படுள்ளது.

பிஜி நாடு

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிஜி நாட்டுக்கு அவர் சென்றுள்ளார்.அங்கு அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்! | Draupadi Murmu Was Awarded Fijis Highest Civilian

பிறகு முர்மு அந்நாட்டு அதிபர் ரது வில்லியம் மைவாலிலி கடோனிவியர் மற்றும் பிரதமர் சிதிவேனி ரபுகா ஆகியோரை சந்தித்து இருதரப்பு கூட்டங்களை நடத்துகிறார் என கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து பிஜி தீவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முர்முவால்,

இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று உறவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தில், பிஜி நாட்டின் நாடாளுமன்றத்தில் முர்மு உரையாற்ற உள்ளார். அதேபோல, இந்திய வம்சாவளியினருடனும் அவர் உரையாட உள்ளார்.

2 நாள் சுற்றுப்பயணம் - முக்கிய தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி முர்மு!

2 நாள் சுற்றுப்பயணம் - முக்கிய தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி முர்மு!

உயரிய விருது

இந்த நிலையில், முர்முவுக்கு பிஜி நாட்டின் உயரிய, கம்பானியன் ஆப் தி ஆர்டர் என்ற விருது அளிக்கபட்டு கவுரவிக்கபட்டது. இந்தியா மற்றும் பிஜி நாடுகளுக்கு இடையேயான வலிமையான உறவுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்! | Draupadi Murmu Was Awarded Fijis Highest Civilian

அதன்படி, முர்முவுக்கு பிஜி நாட்டின் அதிபர் ரது வில்லியம் விருது வழங்கிக் கவுரவித்து உள்ளார். விருது பெற்று கொண்ட பின்னர் நன்றி தெரிவித்து ஜனாதிபதி முர்மு பேசுகையில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளைப் புகழ்ந்து பேசினார்.

ஒரு வலுவான, உறுதி வாய்ந்த மற்றும் வளம் நிறைந்த நாடாகக் கட்டமைப்பதற்கான பணியில் பிஜியுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், இந்தியா மற்றும் பிஜி நாடுகளுக்கு இடையேயான பகிரப்பட்ட மதிப்புகளையும்,

இரு நாடுகளின் துடிப்பு வாய்ந்த ஜனநாயக விசயங்கள், பல்வேறு சமூகங்கள், மனித சமத்துவத்தில் நம்பிக்கை மற்றும் தனிநபர் உரிமைகள் மற்றும் கண்ணியத்தில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதையும் அவர் சுட்டி காட்டியுள்ளார்.