2 நாள் சுற்றுப்பயணம் - முக்கிய தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி முர்மு!

India Draupadi Murmu
By Vidhya Senthil Jul 30, 2024 06:54 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

2 நாள் பயணமாக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் தீவு நாடான பிஜிக்கு பயணம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி முர்மு

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- 2 நாள் பயணமாக வருகிற 5-ந்தேதி தீவு நாடான பிஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் கேடோனிவிர், பிரதமர் சிட்டி ரபுகா ஆகி யோரை ஜனாதிபதி முர்மு சந்திப்பார்.

 2 நாள் சுற்றுப்பயணம் - முக்கிய தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி முர்மு! | President Murmu Toured 3 Countries

அத்துடன் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்ற உள்ளார். இதைத்தொடர்ந்து 2 நாள் பயணமாக வருகிற 7-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நியூசிலாந்து செல்ல உள்ளார். இந்த பயணத்தில் அந்நாட்டு கவர்னர் ஜெனரல் டேம் சிண்டி கிரோ, பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகி யோரை ஜனாதிபதி திரவு பதி முர்மு சந்திக்க உள்ளார்.

 2 நாள் சுற்றுப்பயணம் - முக்கிய தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி முர்மு! | President Murmu Toured 3 Countries

 பயணம்

அங்கு நடைபெறும் கல்வி மாநாட்டிலும் அவர் உரையாற்ற உள்ளார். அதன் பின்னர் 2 நாள் பயணமாக வருகிற 10-ந்தேதிதென்கிழக்கு ஆசிய நாடான டி மோர்-லெஸ்டேக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணிக்க உள்ளார்.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஜனாதிபதி முர்மு சந்திப்பு

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஜனாதிபதி முர்மு சந்திப்பு


3 நாடுகளிலும் இந்திய வம்சாவளியினருடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துரையாட உள்ளார். ஜனாதிபதி ஒருவர் பிஜி மற்றும் டிமோர்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல் முறை. ஜனாதிபதியின் இந்த பயணம் 3 நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்தி ஊக்கமளிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.