கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஜனாதிபதி முர்மு சந்திப்பு

Google Sundar Pichai
By Irumporai Dec 19, 2022 09:13 AM GMT
Report

கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்ச்சிக்காக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை இன்று ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார்.

சுந்தர்பிச்சை

கூகுள் அதன் வருடாந்திர சந்திப்பான 12-வது கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்ச்சியை இந்தியாவில் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்காக இன்று சுந்தர் பிச்சை, இந்தியா வந்துள்ளார்.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஜனாதிபதி முர்மு சந்திப்பு | Sundar Pichai Meets President Murmu

இந்த நிலையில்  ஜனாதிபதி முர்மு, இந்தியர்களின் திறமை மற்றும் அறிவின் சின்னமாக, பத்ம பூஷன் விருது வென்ற சுந்தர் பிச்சையை புகழ்ந்தார்.

குடியரசுதலைவருடன் சந்திப்பு

மேலும், இந்தியாவில் உலகளாவிய டிஜிட்டல் பற்றிய அறிவுக்காக உழைக்குமாறு அவரை வலியுறுத்தியதாக ஜனாதிபதி முர்மு மேலும் கூறினார்.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஜனாதிபதி முர்மு சந்திப்பு | Sundar Pichai Meets President Murmu

இதனை  இது குறித்து ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, இருவரின் சந்திப்பின் படங்களைப் பகிர்ந்து கொண்டு ட்வீட் செய்துள்ளது