2 நாள் சுற்றுப்பயணம் - முக்கிய தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி முர்மு!
2 நாள் பயணமாக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் தீவு நாடான பிஜிக்கு பயணம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி முர்மு
மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- 2 நாள் பயணமாக வருகிற 5-ந்தேதி தீவு நாடான பிஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் கேடோனிவிர், பிரதமர் சிட்டி ரபுகா ஆகி யோரை ஜனாதிபதி முர்மு சந்திப்பார்.
அத்துடன் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்ற உள்ளார். இதைத்தொடர்ந்து 2 நாள் பயணமாக வருகிற 7-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நியூசிலாந்து செல்ல உள்ளார். இந்த பயணத்தில் அந்நாட்டு கவர்னர் ஜெனரல் டேம் சிண்டி கிரோ, பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகி யோரை ஜனாதிபதி திரவு பதி முர்மு சந்திக்க உள்ளார்.
பயணம்
அங்கு நடைபெறும் கல்வி மாநாட்டிலும் அவர் உரையாற்ற உள்ளார். அதன் பின்னர் 2 நாள் பயணமாக வருகிற 10-ந்தேதிதென்கிழக்கு ஆசிய நாடான டி மோர்-லெஸ்டேக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணிக்க உள்ளார்.
3 நாடுகளிலும் இந்திய வம்சாவளியினருடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துரையாட உள்ளார்.
ஜனாதிபதி ஒருவர் பிஜி மற்றும் டிமோர்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல் முறை.
ஜனாதிபதியின் இந்த பயணம் 3 நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்தி ஊக்கமளிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
