இல்லற வாழ்க்கை நடத்த முடியாது; நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா? போட்டுடைத்த பிரபலம்!
நடிகர் நெப்போலியன் மருமகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் நெப்போலியன்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கியவர் நடிகர் நெப்போலியன். ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் மகன் தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அண்மையில், இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்து தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை பதிவிட்டிருந்தார்.
மகன் நிச்சயதார்த்தம்
நெப்போலியன் மருமகள்- அக்ஷயாவின் சொந்த ஊர் திருநெல்வேலி. மூலக்கரைப்பட்டியை சார்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் என தெரியவந்துள்ளது. இந்த திருமணம் குறித்து டாக்டர் காந்தராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நெப்போலியனின் மகன் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நோய் ஒரு ஆபத்தான நோய், ஒரு அரியவகை நோய், பரம்பரையாக வரக்கூடிய நோய் இதற்கு ஆங்கில மருத்துவத்தில் எதுவும் செய்ய முடியாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12 அல்லது 18 வயதிலேயே இறந்துவிடுவார்கள். இவர் 25 வயது வரை இருப்பதே பெரிய சாதனை தான்.
அவருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அவரது திருமணம் செய்து கொள்ளும் பெண், அவரின் பெற்றோர்கள் இதை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.