இரட்டைக்கொலை கொலை வழக்கு - 47 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த போலீஸ்!

Australia Crime Murder
By Vidhya Senthil Sep 21, 2024 04:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

 ஆஸ்திரேலியாவில் 47 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் தற்பொழுது காவல்துறை குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.

இரட்டைக்கொலை 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள எஸ்ஸேவை சேர்ந்தவர்கள் சுஷானே ஆம்ஸ்ட்ராங் மற்றும் சுசன் பார்ட்லெட். கடந்த 1977ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி அவர்களின் வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

murder

இந்த சம்பவத்தில் அவரது 16 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.இந்த சம்பவம் மெல்போர்னை உலுக்கியது .

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரித்து வந்த நிலையில் உடல்களை மீட்பதற்கு 3 தினங்களுக்கு முன்பு, கத்தியுடன் சுற்றித் திரிந்த 18 வயது இளைஞரைப் பிடித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ அதிகாரி - பிறப்புறுப்பில் கண்ணாடியை திணிக்க முயன்ற கொடூரம்

பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ அதிகாரி - பிறப்புறுப்பில் கண்ணாடியை திணிக்க முயன்ற கொடூரம்

ஆனால், அந்த நபர் தான் குற்றவாளி என்பதை அறியாமல், அவரை காவல்துறை அப்போது விடுவித்து விட்டனர்.தொடர்ந்து குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்குச் சன்மானத்தை அறிவித்தது.

 குற்றவாளி  கைது

பிறகு விசாரணையில் குற்றவாளி அடையாளம் கண்ட காவல்துறை, அந்த நபர் கிரீக் - ஆஸ்திரேலியா நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்றவர் எனத் தெரிய வந்தது. இந்த சூழலில் அந்த குற்றவாளி கிரீக் நாட்டின் குடியுரிமை பெற்று தஞ்சம் புகுந்திருந்ததால்,கைது செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

murder

இந்த நிலையில், 47 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்போர்ன் இரட்டைக் கொலை வழக்கு குற்றவாளியை, இத்தாலியின் தலைநகர் புமிசினோ ஏர்போர்ட்டில் வைத்து காவல்துறை கைது செய்தனர். 18 வயதில் செய்த குற்றத்திற்காக 65 வயதில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.