இந்த எண்களை ஏடிஎம் Pin நம்பராக வைக்காதீங்க - ஆபத்து அதிகம்!
எந்த PIN நம்பர்களைப் பயன்படுத்தக்கூடாது? என பார்க்கலாம்.
ஏடிஎம் PIN
ஏடிஎம் கார்டு பயன்படுத்துபவர்களை குறிவைத்து சைபர் மோசடிகளும் நடந்து வருகின்றன. இதில் நான்கு இலக்க பின் எண் தான் வங்கி கணக்கை பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்கிறது.
மீண்டும் மீண்டும் வரும் எண்கள் அல்லது தொடர்ச்சியாக வரும் எண்களை பயன்படுத்த வேண்டாம். தலைகீழ் வரிசையிலும் PIN நம்பரை பயன்படுத்த வேண்டாம்.
கவனம் தேவை
பிறந்த தேதியை PIN நம்பராக பலர் பயன்படுத்துகின்றனர். பிறந்தநாள் சமூக ஊடகங்கள், ஆவணங்களில் இருப்பதால் இவற்றை யூகிக்க எளிதானது.
மொபைல் எண் இலக்கங்கள், வாகன எண், ஆதார் எண் ஆகியவையும் எளிதாக யூகிக்க வாய்ப்பிருப்பதால் இவை பாதுகாப்பானவை இல்லை.
அனைத்து 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் PIN நம்பரை மாற்றுவது அவசியம். ஒவ்வொரு கார்டுக்கும் வெவ்வேறு PIN நம்பரை வைப்பது நல்லது.

ரவிராஜ் படுகொலை வழக்கில் ராஜபக்சர்களின் முன்னாள் சகாவுக்கு தொடர்பு : கசிந்த அதிர்ச்சி தகவல் IBC Tamil
