5-ஸ்டார் ஹோட்டல் வசதியில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் - முழு விவரம்!
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் அறிமுகமாகவுள்ளது.
ஸ்லீப்பர் வந்தே பாரத்
முதல் முறையாக அதிவேக, சொகுசு, உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வரவுள்ளது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விவரம்
ஒவ்வொரு இருக்கைக்கும் ஒருங்கிணைந்த வாசிப்பு விளக்கு, யூ.எஸ்.பி சார்ஜிங் பாயிண்ட் இருக்கும். பொது அறிவிப்பு, காட்சி தகவல் அமைப்பு வசதிகளும் இருக்கும்.
வந்தே பாரத் ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் காட்சிப் பலகை, பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு கழிப்பறைகள் கட்டப்படுகின்றன.
முதல் ஏசி முன்பதிவு செய்தவர்களுக்கு சூடான நீரில் குளிக்கும் வசதி உண்டு. உலகிலேயே நவீன ஸ்லீப்பர் ரயில்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். இதில் பயணிகளுக்கு உயர் தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்.