உடலை அதிகபடியாக வலுவாக்கும்.. தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் -இதை மறந்துடாதீங்க!
தீபாவளி பண்டிகை அக் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு விடூகளில் முறுக்கு , அதிரசம் , லட்டு உள்ளிட்ட பலகாரம் தயார் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்டாக பாசிப்பயறு உருண்டை எளிமையாகச் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம் .
தேவையான பொருட்கள்
- பாசிப்பயிறு -ஒரு கப்
- வெல்லம் -முக்கால் கப்
- சோளமாவு-கால் கப்
- மைதா-முக்கால் கப்
- அரிசிமாவு -முக்கால் கப்
- தேங்காய் -அரை கப்
- ஏலக்காய் பொடி - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாசிப்பயிரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏலக்காய் , வெல்லம் , சிறிது உப்பு சேர்த்து மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு அரைத்த கலவையில் சுவைக்காகச் சிறிது ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கலந்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்.
பிறகு சோளமாவு ,அரிசிமாவு,மைதா மாவுகளைத் தோசை மாவு பதத்திற்குக் கலகி கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்த்ததும் மாவு கலவையில் பாசிப்பயிறு உருண்டையை முக்கி எடுத்து எண்ணெய்யில் விட வேண்டும்.
நன்றாகப் பொன் நிறமாக வந்ததும் எடுத்தால் சுவையான பாசிப்பயிறு உருண்டை தயார்.