தூங்கி எழுந்ததுமே போன் பார்பவரா நீங்கள்? வரப்போகும் பெரிய ஆபத்து - நிபுணர்கள் ஷாக் தகவல்!

Smart Phones Smart Watch Ireland World Social Media
By Swetha Oct 18, 2024 02:30 PM GMT
Report

தூங்கி எழுந்தவுடன் முதலில் போன் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

போன் பார்பவரா?

இன்றைய காலகட்டத்தில் போன் ஒரு இன்றியமையாத பொருளாக மாறியுள்ளது. ஒவ்வொரு மனிதனும், எல்லா நேரமும், எல்லா இடத்திலும் மொபைல் போன் பயன்படுத்துவது ஒரு சாதாரன வழக்கமாகவே மாறியுள்ளது. இன்று போனையும், மனிதனையும் பிரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

தூங்கி எழுந்ததுமே போன் பார்பவரா நீங்கள்? வரப்போகும் பெரிய ஆபத்து - நிபுணர்கள் ஷாக் தகவல்! | Are You Using Phone The First Thing After Waking

அதிலும் குறிப்பாக தூங்கி எழுந்தவுடன் முதலில் போன் பார்க்கும் பழக்கமும், இரவு தூங்கப்போகும் முன் போன் பார்க்கும் பழக்கமும் மக்களிடையே பரவலாக அதிகரித்து வருகிறது. இது ஆரம்பக்கட்டத்தில் பாதிப்பில்லாததாகத் தோன்றலாம்,

ஷாக் தகவல்

ஆனால் ஜலந்தரில் உள்ள மன்ஜீத் சைனி மருத்துவமனையின் MD மனநல மருத்துவர், நிபுணர் டாக்டர் ஷுப்கர்மன் சிங் சைனி இந்தப் பழக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

தூங்கி எழுந்ததுமே போன் பார்பவரா நீங்கள்? வரப்போகும் பெரிய ஆபத்து - நிபுணர்கள் ஷாக் தகவல்! | Are You Using Phone The First Thing After Waking

இது NoMoPhobia (No Mobile Phobia) எனப்படும் நிலையை ஒருவாக்குவதாக அவர் கூறுகிறார். அதாவது, மொபைல் ஃபோன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலை ஆகும். இது உடல், மன ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்கிறார்.

ஒரு நாளுக்கு 100 போன் கால் - கடைசியில் உண்மை தெரிந்து மிரண்ட மனைவி!

ஒரு நாளுக்கு 100 போன் கால் - கடைசியில் உண்மை தெரிந்து மிரண்ட மனைவி!

தூக்கமில்லாமை

ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிவரும் ப்ளூ லைட் உமிழ்வு, தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோனின் உடலின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தும். எழுந்தவுடன் உடனடியாக நீல ஒளியில் வெளிப்படுத்துவது உங்கள் சர்க்காடியன் ரிதத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

தூங்கி எழுந்ததுமே போன் பார்பவரா நீங்கள்? வரப்போகும் பெரிய ஆபத்து - நிபுணர்கள் ஷாக் தகவல்! | Are You Using Phone The First Thing After Waking

இது நாள் முழுவதும் சோர்வுக்கு வழிவகுக்கும் மற்றும் அடுத்த இரவில் தூங்குவதை கடினமாக்குகிறது.

மன அழுத்தம்

சமூக வலைதள நோட்டிவிக்கேஷனை பார்த்து உங்கள் நாளைத் தொடங்குவது அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கலாம்.

தூங்கி எழுந்ததுமே போன் பார்பவரா நீங்கள்? வரப்போகும் பெரிய ஆபத்து - நிபுணர்கள் ஷாக் தகவல்! | Are You Using Phone The First Thing After Waking

இந்த மன அழுத்தம் கார்டிசோல் அளவுகள் மற்றும் அதிக இதயத் துடிப்பு, மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

கவனச் சிதறல் மற்றும் உற்பத்தி பாதிப்பு

காலையில் முதலில் போனை எடுத்து பார்ப்பது தியானம், உடற்பயிற்சி அல்லது ஆரோக்கியமான காலை வேலைகளை செய்யவிடாமல் மறக்கடிக்க செய்யும்.

தூங்கி எழுந்ததுமே போன் பார்பவரா நீங்கள்? வரப்போகும் பெரிய ஆபத்து - நிபுணர்கள் ஷாக் தகவல்! | Are You Using Phone The First Thing After Waking

அதிக உற்பத்தி மற்றும் அர்த்தமுள்ள செயல்களில் இருந்து மிக எளிதாக திசைதிருப்பும். இந்த பழக்கம் நாள் முழுவதும் உங்கள் கவனத்தைத் தடுக்கலாம், இது கல்வி மற்றும் தொழில்முறை சூழல்களில் உற்பத்தித்திறன் குறைவதற்கும் செயல்திறன் குறைவதற்கும் வழிவகுக்கும்.