ஒரு நாளுக்கு 100 போன் கால் - கடைசியில் உண்மை தெரிந்து மிரண்ட மனைவி!
போன் கால் குறித்து புகாரளித்த மனைவிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
செல்போன் அழைப்பு
ஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 100 முறை செல்போன் அழைப்பு வந்துள்ளது. வெவ்வேறு எண்களில் இருந்து அழைப்பதும், அழைப்பை ஏற்றதும் எதுவும் பேசாமல், அதனை துண்டிப்பதுமாக இருந்துள்ளது.
புதுபுது எண்களில் இருந்து யார் அழைப்பது என்றே தெரியாமல் குழம்பிய அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். உடனே அதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் அதிர்ச்சி
தொடர்ந்து அந்தப் பெண்ணும் தனக்கு வரும் அழைப்பு தொடர்பாக கவனிக்க தொடங்கியுள்ளார். கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது போன் அழைப்புகள் வராமல் இருப்பதை கண்டறிந்துள்ளார்.
வீட்டில் இருக்கும்போதும் தொடர்ந்து செல்போன் அழைப்புகள் வந்தாலும், தன் கணவரின் போனை தான் உபயோகிக்கும்போது போன் வராமல் இருந்துள்ளது. அதன்படி காவல்துறையினர் கணவரை அழைத்து விசாரித்ததில்,
மனைவிக்கு ஒரு நாளில் 100க்கும் மேற்பட்ட கால்களை செய்தது அவர் தான் என்பதை ஒப்புக்கொண்டார்.
மேலும், தன் மனைவியை அதிகமாக காதலிப்பதாகவும், அதன் காரணமாக இப்படி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.