ஒரு நாளில் 100 முறை போன் கால்; டார்ச்சர் செய்த காதலி - போலீஸில் கதறிய காதலன்!
காதலி அதிகமுறை போன் காதல் செய்வதாக காதலன் புகாரளித்துள்ளார்.
லவ் டார்ச்சர்
சீனாவை சேர்ந்தப் பெண் சியாயு(18). இவர் பல்கலை கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது ஒருவரை காதலிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் காதல் ஆழமாகச் செல்லவே அந்தப் பெண் ஒரு நாளுக்கு குறைந்தது 100 முறை தொலைபேசியில் அழைத்து காதலனை விசாரித்துள்ளார். இது காதலனை மிக மன அழுத்தத்தில் தள்ளியுள்ளது.
இதனை தாண்டி, காதலன் செல்போன் அழைப்பை ஏற்கவில்லையென்றால் மிகவும், ஆத்திரப்பட்டு வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்த ஆரம்பித்துள்ளார். பால்கனியில் இருந்து குதிக்கப் போவதாகவும், கழுத்தை அறுத்துக்கொள்ளப் போவதாகவும் மிரட்ட தொடங்கியுள்ளார்.
கதறிய காதலன்
இதனை தாங்கிக்கொள்ள முடியாத காதலன் ஒருகட்டத்தில் போலீஸில் புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள மருத்துவர்,
`காதல் உறவுகளில் இந்த வகையான வெறித்தனமான நடத்தையை விவரிக்க "love brain" (காதல் மூளை)" என்பது பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய நிலைமைகள் ஆரோக்கியமற்ற குழந்தைப் பருவத்தாலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
குறிப்பாக குழந்தை பருவத்தில் பெற்றோருடன் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருக்காதவர்களிடம் இது அடிக்கடி நிகழ்கிறது. எனவே, இது போன்ற கடுமையாக நடந்துகொள்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை எனத் தெரிவித்துள்ளார்.