சின்னவர்'னு இனி கூப்பிடாதீங்க...! கட்சி தொண்டர்களுக்கு strict ஆர்டர் போட்ட உதயநிதி..!
இனி தன்னை யாரும் பட்டப்பெயர் வைத்து கூப்பிட வேண்டாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறப்புரை
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சேலத்தில் 7 லட்சம் பேர் கலந்து கொண்ட வெற்றி மாநாட்டை நடத்தி காட்டி இருக்கிறோம் என்று கூறி, தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவது கலைஞர் தான் என்றும் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் தான், மத்திய அரசிடம் இருந்து அரசிடம் தெம்பாக தமிழகத்திற்கு தேவையானதை கேட்டு வாங்கலாம் என்றும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பிடிக்கல...
வெள்ள நிவாரணத்திற்காக மத்திய நிதி அமைச்சரிடம் "உங்க அப்பா வீட்டுக்காசா கேட்டேன், மக்கள் வரிப்பணத்தை கேட்டேன்" என்று தான் கேட்டதும், உடனே உதயநிதி மரியாதையாக பேச வேண்டும் என்று டெல்லி மீட்டிங்கில் பேசுகிறார்கள் என்று சுட்டிக்காட்டிய உதயநிதி, அவர்கள் கேட்ட மரியாதையை கொடுத்து விட்டேன் ஆனால் கேட்ட நிதி இன்னும் தரவில்லை என்று விமர்சித்தார்.
மேலும், கட்சி பொதுக்கூட்டம் நிகழ்ச்சிகளில் தன்னை தொண்டர்களும், நிர்வாகிகளும் பட்டப்பெயர் வெச்சு கூப்பிடுவது அவர்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும் தனக்கு அதில் உடன்பாடே கிடையாது என்று கூறி,
தான் உங்களை விட வயதில் சின்னவர் தான் என்று தெரிவித்து தான் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருக்க தான் ஆசைப்படுகிறேன் என்றும் தயவு செய்து பட்ட பெயர் வைத்து கூப்பிடுவது தவிர்த்து விடுங்கள் என கேட்டுக்கொண்டார்.