இனி காவாலா...காவாலா'னு டான்ஸ் ஆட வேண்டியது தான்..! திமுகவை சரமாரியாக தாக்கிய அண்ணாமலை..!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெரிந்து விடும் காவாலா...காவாலா'வா அல்லது என் மண் என் மக்கள் யாத்திரை'யா..? என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பேட்டி
என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் ஒரு பகுதியாக வேலூர் வந்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கேவி குப்பம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், உதயநிதி பாஜக தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என விமர்சித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர் அப்படியே நினைத்துக்கொண்டிருக்கட்டும் என்று கூறி, அவர்கள் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.
டான்ஸ் ஆட...
தொடர்ந்து, "காவாலா காவாலா" பாடலுக்கு இளைஞர் அணி மாநாட்டில் டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்க வேண்டியதுதான் என கட்டமாக விமர்சனம் செய்த அண்ணாமலை, திமுகவின் ஆசை இந்த தேர்தலில் நிராசையாகதான் போகும் என உறுதிபட தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தெரியும், காவாலா காவலா வெற்றி பெறுகிறதா? அல்லது "என் மண் என் மக்கள்" வெற்றி பெருகிறதா..? என்று கூறி, இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400-கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.