தொடர்ந்து மறுக்கும் திமுகவினர்..! ஆரணி தொகுதியையும் காங்கிரஸ்ஸிற்கு ஒதுக்க மறுப்பு..!
ஆரணி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்க திமுகவினர் கட்சி ஆலோசனை கூட்டத்திடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொகுதி பங்கீடு
இந்த நாடாளுமன்ற தேர்தல் திமுக கூட்டணிக்கு பெரும் சிக்கலான ஒன்றாக மாறிவருகின்றது. ஏனென்றால், கூட்டணியில் எந்த இடங்களை மற்ற கட்சிகளுக்கு ஒதுக்குவது என்ற பெரும் பிரச்சனையை திமுக தலைமை சந்தித்து வருகின்றது.
கூட்டணி கட்சிகள் பல சென்ற முறையை விட அதிக இடங்களை கேட்பதாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளிவருகின்றன. அதே போல, திமுகவினர் மாவட்ட பிரிவினரும் தங்கள் தொகுதியை கூட்டணிக்கு வழங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதலில், சிவகங்கை திமுகவினர் தங்களது தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கூட்டணிக்கு வழங்க பெரும் எதிர்ப்புகளை கட்சி தலைமையிடம் தெரிவித்திருந்த செய்திகளை வெளிவந்தன. திருவண்ணாமலை மாவட்ட திமுகவினர் மீண்டும் ஆரணி தொகுதியை ஒதுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சென்ற முறை இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் விஷ்ணு பிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆலோசனை கூட்டத்தில் கட்சி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நடக்கும் படி அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.