மக்களவை தேர்தல்: திமுக, காங்கிரஸ் கூட்டணி வெல்லும் - இதோ புதிய கருத்து கணிப்பு முடிவு!
இந்த ஆண்டு இறுதியில் ஐந்து முக்கிய மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தலை இலக்காகக் கொண்டு பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இதனையொட்டி எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில்,
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக 31 சதவீத வாக்குகளைப் பெறும். இதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
வெற்றி யாருக்கு?
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 7 சதவீத வாக்குகளை மட்டுமே பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 7 லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
மறுபுறம், மாநிலத்தில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் போகலாம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.