மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக - வெளியானது 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்..!

Indian National Congress DMK BJP Narendra Modi Election
By Thahir Jul 31, 2023 09:39 AM GMT
Report

2024 ஆம் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

பாஜக கூட்டணி வெற்றி பெறும்

2024 ஆம் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

அந்த கருத்து கணிப்பு முடிவில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன.  தற்போது மக்களவையில் பாஜகவுக்கு 303 எம்பிக்கள் உள்ளனர்.

வருகிற மக்களவை தேர்தலில் பாஜகவின் பலம் குறையக்கூடும். அந்த கட்சி 290 மக்களவை தொகுதிகளை கைப்பற்றும்.

BJP will come back to power in 2024

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெறும். குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 318 தொகுதிகளை கைப்பற்றி 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும்.

இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 66 தொகுதிகளை கைப்பற்றும். இந்த கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 22 எம்பிக்கள் உள்ளனர். வருகிற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெறும்.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக - 19, ராஷ்டீரிய ஜனதா தளம் - 7, ஐக்கிய ஜனதா தளம் - 7, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு - 11, தேசியவாத காங்கிரசின் சரத்பவர் பிரிவு - 4 இடதுசாரி கட்சிகள் - 8 உள்பட இந்தியா கூட்டணி 175 தொகுதிகளை கைப்பற்றும்.

பெரும்பாலான மாநிலங்களில் பாஜக முதலிடம் 

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி-73 இந்தியா கூட்டணி-7 தொகுதிகளைக் கைப்பற்றும்.

BJP will come back to power in 2024

பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-24, இந்தியா கூட்டணி-16 தொகுதிகளை கைப்பற்றும்.

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-24, இந்தியா கூட்டணி-24-ல் வெற்றி பெறும்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-9, இந்தியா கூட்டணி-30ல் வெற்றி பெறும். மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-12, இந்தியா கூட்டணி-30ல் வெற்றி பெறும்.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா கூடடணி-20, இந்தியா கூட்டணி-7ஐ கைப்பற்றும்.

குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணியே வெற்றி பெறும். இந்தியா கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் இந்தியா கூட்டணியே கைப்பற்றும். பா.ஜனதா கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-21, இந்தியா கூட்டணி-4ல் வெற்றி பெறும்.

ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி, இந்தியா கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. அந்த மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 18, தெலுங்கு தேசம் 7 தொகுதிகளைக் கைப்பற்றும்.

ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-8, பிஜு ஜனதா தளம் 13-ல் வெற்றி பெறும். இந்தியா கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-24, இந்தியா கூட்டணி-5ஐ கைப்பற்றும்.

தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-6, இந்தியா கூட்டணி-2, பாரத் ராஷ்டிரிய சமிதி-8ல் வெற்றி பெறும்.

அசாமில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-12, இந்தியா கூட்டணி-1ல் வெற்றி பெறும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 11 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-7, இந்தியா கூடணி-4 தொகுதிகளை கைப்பற்றும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-13, இந்தியா கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றிபெறும்.

அரியானாவில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-8, இந்தியா கூட்டணி 2 இடங்களை கைப்பற்றும்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளையும் இந்தியா கூட்டணியே கைப்பற்றும். டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-5, இந்தியா கூட்டணி-2ல் வெற்றி பெறும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 5 தொகுதிகளையும் பா.ஜனதா கூட்டணி கைப்பற்றும்.

காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் பா.ஜனதா கூட்டணி-3, இந்தியா கூட்டணி-2ல் வெற்றி பெறும்.

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-3, இந்தியா கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றிபெறும்.

மணிப்பூரில் மொத்தம் உள்ள 2 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும். இதர வடகிழக்கு மாநிலங்களில் 9 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும்.

கோவாவில் மொத்தம் உள்ள 2 தொகுதிகளையும் பா.ஜனதா கூட்டணி கைப்பற்றும். என்று கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது