'கிப்ட்' வேண்டாம்.. மோடிக்கு இதை செய்யுங்கள் - வைரலாகும் திருமண அழைப்பிதழ்!
தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள் என்று அச்சிட்டு வேண்டுகோள் விடுத்த திருமண அழைப்பிதழ் ஒன்று வைரலாகி வருகிறது.
திருமண அழைப்பிதழ்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்திகண்டி நரசிம்முலு. இவரது மகனுக்கு வரும் ஏப்ரல் 4-ம் தேதி திருமணம் என்பதால், அதற்கான திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டது. அதன் மேல் அட்டையின் மீது பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
மோடிக்கு வாக்களியுங்கள்
அதில், "பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிப்பதே இந்த திருமணத்திற்கு நீங்கள் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசாகும். வேறு பரிசு வேண்டாம்" என எழுதப்பட்டுள்ளது. தற்போது இந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நந்திகண்டி நரசிம்முலு கூறுகையில், "பிரதமர் மோடிக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கூறினார். இதற்காக எனது மகனின் திருமண விழாவினை பயன்படுத்த முடிவு செய்தேன். இதற்கு குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டதால், திருமண அழைப்பிதழில் மோடிக்கு வாக்களியுங்கள் என்று அச்சிட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை IBC Tamil
யாழில் பயங்கரம் : பாடசாலையிலிருந்து மகளை ஏற்றிச் சென்ற தந்தை தொடருந்து மோதி பலி : மகள் படுகாயம் IBC Tamil