இந்த நாடு மூலம் என் உயிருக்கு ஆபத்து - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு

Donald Trump United States of America Iran US election 2024
By Karthikraja Sep 25, 2024 07:06 AM GMT
Report

இதுவரை கண்டிராத அளவுக்கு ஆயுதங்களால் சூழப்பட்டிருக்கிறேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

வரும் நவம்பர் 5 ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். 

trump vs kamala harris

கடந்த ஜூலை மீது தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை ஒருவர் சுட முயன்றார். அந்த கொலை முயற்சியில் டிரம்ப் மயிரிழையில் உயிர் தப்பினார். சம்பவ இடத்திலே அந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு கொன்றனர். 

டிரம்ப்பை சுட்ட 20 வயது இளைஞர் யார் - வெளியான பரபரப்பு தகவல்

டிரம்ப்பை சுட்ட 20 வயது இளைஞர் யார் - வெளியான பரபரப்பு தகவல்

துப்பாக்கி சூடு

அதன் பின் மீண்டும் செப்டம்பர் மாதம் மீண்டும் டிரம்ப் கோல்ப் விளையாடும் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த முயற்சியிலும் டிரம்ப் உயிர் தப்பினார். இந்நிலையில் தன் உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் பக்கத்தில அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரானால் எனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்க ராணுவமும் பார்த்துக்கொண்டு காத்திருக்கிறது. ஈரானால் ஏற்கனவே செய்யப்பட்ட நகர்வுகள் பலனளிக்கவில்லை, ஆனால் அவை மீண்டும் முயற்சிக்கும். யாருக்கும் நல்ல சூழ்நிலை இல்லை. 

நான் இதுவரை கண்டிராத அளவுக்கு அதிகமான மனிதர்கள், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களால் சூழப்பட்டிருக்கிறேன். இரகசிய சேவைக்கு அதிக பணத்தை அளிக்க ஒருமனதாக ஒப்புக்கொண்டதற்காக காங்கிரஸுக்கு நன்றி. குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் ஏதோ ஒரு விஷயத்தில் ஒன்றிணைவதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார்.