செல்வச் செழிப்பை அடைய.. பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 7 பொருட்கள்!
பூஜை அறையில் சில பொருட்களை வைத்தால் நேர்மறையான எண்ணங்களைப் பெற முடியும்.
பூஜை அறை
நம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெறக் கடின உழைப்பு , நம்பிக்கை, விடாமுயற்சி எவ்வளவு முக்கியமோ கடவுளின் அருளும் முக்கியம் வாய்ந்தது. இந்துமத கலாச்சாரத்தில் பூஜையறை என்பது ஆன்மீக முக்கியத்தை கொண்ட இடமாகக் கருதப்படுகிறது.
அப்படி பூஜை அறையின் ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கவும், வெற்றி மற்றும் செல்வச் செழிப்பை அடையவும் சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். பூஜை அறையின் காலையிலும், மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன.
தீப ஒளி புற இருளை அகற்றுகிறது.குறிப்பாகப் பூஜையறையில் விளக்கேற்று நடத்துவதும் முக்கியமானது ஊதுபத்திகள் : பூஜை அறையில் ஏற்றப்படும் மனதை ஊதுபத்திகள் மனதைத் தூய்மைப்படுத்தும் குணத்தைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. பிரார்த்தனை, தியானம் போன்ற சூழ்நிலைகளில் மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.
7 பொருட்கள்
மணி : பூஜையின்போது மணியோசை எழுப்புவது மிகவும் முக்கியமான ஒன்று. இதைப் பூஜையறையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதிலிருந்து ஏற்படும் அதிர்வு நம்மிடம் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டி, ஆன்மீக ரீதியில் செழுமைப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
பூஜையறையில் புனிதமான நதியின் நீரோ அல்லது நன்னீரோ வைத்திருப்பது மிகவும் நல்லது. இந்த புனித நீர் பூஜையறையை சுத்திகரித்து, பாதுகாப்பை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் பூஜையறையில் வைக்கப்படும் நீரில் துளசி சேர்த்து சில துளிகளை நாள்தோறும் பூஜை அறை மற்றும் வீடு முழுவதும் தெளிப்பது மிகவும் நல்லது.