இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருக்கா? மோசமான விளைவை ஏற்படுத்தும் - எச்சரிக்கும் ஜோதிடம்!
அன்றாட பழக்க வழக்கங்கள், மூலம் கிரக நிலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஜோதிடம்
ஜோதிடம் என்பது எது நிகழப்போகிறது என்பதைக் குறி சொல்வதல்ல. ஒருவரின் வாழ்க்கையில் அந்தந்தக் காலகட்டத்தில் கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள் அனைத்தும் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருடைய சூழ்நிலைகளைக் கணிக்கும் கணக்கு.

12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் கொண்டு ஒரு நபருடைய வாழ்க்கையை ஜோதிடத்தில் கணிக்கப்படுகிறது. இதன் வழியாகத்தான் பலன்கள் பெறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நாம் செய்யும் செயல்களுக்குக் கிரகங்கள் மூலம் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
காலையில் தாமதமாக எழுந்துகொள்வது சூரிய கிரகத்தில் பாதிப்பை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் வேலை, தொழில் ரீதியாகச் சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. நம்மில் பலருக்குப் படுக்கையில் உணவு சாப்பிடும் பழக்கம் உண்டு .
மோசமான விளைவு
இது சுக்கிரன் கிரகத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் பண ரீதியான சிக்கல்கள் ஏற்படும் . நகங்களைக் கடிப்பது சனி கிரகத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் எந்த விஷயமாக இருந்தாலும் தடங்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

நாம் பயன்படுத்தும் குளிக்கும் அறை/ கழிப்பறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் ராகு கிரகத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் கடன் தொல்லை அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    