கல்யாணம் தாமதமாகிறதா? இதை மட்டும் செய்யுங்க - உடனே முடிவாகும்!
                                    
                    Astrology
                
                                                
                    Marriage
                
                        
        
            
                
                By Sumathi
            
            
                
                
            
        
    திருமணம் தாமதமாகாமல் இருக்க சில ஜோதிட பரிகாரங்கள் உள்ளன.
திருமண பரிகாரம்
திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நல்ல வரன் அமைவது தாமதமாகாமல் இருக்க செய்ய வேண்டிய சில ஜோதிட பரிகாரங்கள் உள்ளன. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என தெரிந்துக்கொள்ளலாம்.

- சனி தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். நாம் செய்யக்கூடிய தான, தர்மங்கள், நற்செயல்கள் சனி தோஷத்தைப் போக்கக்கூடியதாக இருக்கும்.
- செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் துர்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிக நல்ல பலனைத் தரும்.
- பசுவிற்கு கீரை, புல் தீவனம் அளித்து திருமண யோகமும், நம் கர்ம வினையையும் தீர்த்துக் கொள்ளலாம்.
- சுக்ல பக்ஷத்தின் முதல் வியாழன் அன்று, ஒரு ஜோடி ஏலக்காய்களுடன் 5 வகையான இனிப்புகள் மற்றும் சுத்தமான நெய் விளக்கு ஏற்றி தண்ணீர் வைத்து குருவை 3 வியாழக்கிழமைகளில் வணங்க வேண்டும்.
- வியாழன் அன்று லக்ஷ்மி-நாராயணன் கோவிலுக்குச் சென்று, விஷ்ணுவுக்கு கல்கி அர்ச்சனை செய்து, நெய்யால் செய்யப்பட்ட ஐந்து லட்டுகளை சமர்ப்பித்து, பிரார்த்தனை செய்யவேண்டும். பொறுப்பு துறப்பு: இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    