ஈரத்துணியை பிழிந்தால் ஜெல்லியாக மாறுகிறதா? மீண்டும் வைரலாகும் வீடியோ காட்சி..!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர் ஒருவர் ஈரத்துணியை பிழிந்த போது தண்ணீர் கீழே வழியாமல் துணியைச் சுற்றி ஜெல்லி போன்று மாறி நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விண்வெளியில் தண்ணீர் கீழே கொட்டாது..
பூமியில் இருக்கும் நாம் துணி துவைக்கும் போது ஈரத்துணியை பிழிந்தால் புவியின் ஈர்ப்பு விசை காரணமாக தண்ணீர் நிலப்பரப்பை நோக்கி வழிந்தோடும்.

இது நமக்கு தெரிந்த ஒன்று தான் ஆனால் ஓய்வு பெற்ற கன்னட நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்ஃபீல்ட் இந்த வீடியோவை 2013 இல் பகிர்ந்து கொண்டார்.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் Wonder Of Science என்ற ட்விட்டர் பக்கத்தில் விண்வெளியில் இருக்கும் போது ஈரமான துணியை பிழிந்தால் இது தான் நடக்கும் என்ற தலைப்பில் இந்த வீடியோ பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
This is what happens when you wring out a wet towel while floating in space.
— Wonder of Science (@wonderofscience) June 21, 2022
Credit: CSA/NASA pic.twitter.com/yTZclq9bCJ
அந்த வீடியோவில் விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்ஃபீல்ட் விண்வெளியில் ஈரமான துணியை இறுக்கமாக பிழிந்துள்ளார்.
அப்போது தண்ணீர் கீழே வடியாமல் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையின் காரணமாகவும்,நீரின் மேற்பரப்பு இழுவிசையின் காரணமாகவும் நீர்த்துளிகள் கீழ்நோக்கி தரையில் விழாமல் ஜெல்லி போன்று உருவாகி குழாய் போன்று காட்சி அளித்தது.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.