வாங்களேன் போவோம் அப்படியே விண்வெளி பயணம் ? பட்ஜெட் எவ்வுளவு தெரியுமா?

spacetour Virgin Galactic flight
By Irumporai Jul 12, 2021 01:00 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

நியூ மெக்சிகோவிலிருந்து, வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தினுடைய நிறுவனரான, ரிச்சர்டு பிரான்சன், இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா பந்த்லா என்ற 34 வயது பெண் மற்றும் 3 நபர்கள் சேர்ந்து குழுவாக விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் யுனிட்டி-22 விண்கலம், வி.எம்.எஸ். ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் விண்ணுக்கு அனுப்பபட்டனர் இதில், விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 6 பேர் பயணம் மேற்கொண்டனர்.

யூனிட்டி விண்கலம் விமானத்தில் இருந்து பிரிந்து, விண்வெளியை நோக்கி தனியாக பறந்தது விண்வெளியை நெருங்கியதும், அங்கு புவி ஈர்ப்பு விசை கொஞ்சம் குறைவாக உள்ள இடத்தில் விண்கலம் மிதந்தது. விண்கலத்தில் இருக்கும் வீரர்கள் விண்வெளி அனுபவத்தை உணர்ந்தனர்.

விண்வெளியில் இருந்தபடி விர்ஜின் கேலடிக் குழுவினருக்கு பிரான்சன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.விண்கலம் சிறிதுநேரம் வெற்றிகரமாக மிதந்தபின் விமான இயந்திரகள், எதிர் திசையில் இயக்கப்பட்டு, பூமியை நோக்கி திரும்பி விமானம் போன்று தரையிறங்கியது.

விண்கலத்தில் இருந்து வெளியே வந்த குழுவினரை அனைவரும் வாழ்த்தினர். இது தனது வாழ்நாளின் சிறந்த அனுபவம் என பிரான்சன் தெரிவித்தார்.

. மொத்தமாக இந்த விஎம்எஸ் யூனிட்டி விண்கலத்தின் பயணம் 90 நிமிடங்கள் ஆகும். ஆண்டுக்கு 400 விண்வெளி பயணங்களை நடத்த விர்ஜின் கேலடிக் திட்டமிட்டுள்ளது.

இதற்காக சுமார் 600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் இதில் உலகின் புகழ்பெற்ற பாடகர்கள், ஹாலிவுட் பிரபலங்களும் அடக்கம். இந்தப் பயணத்துக்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம் ரூபாய்தான் அப்புறம் நீஙக ரெடியா?