விண்வெளியில் நடந்த அதிசயம் - புகைப்படத்துடன் பகிர்ந்த நாசா

NASA cosmic rose galaxies wonders
By Petchi Avudaiappan Aug 27, 2021 09:28 PM GMT
Report

விண்வெளியில் காஸ்மிக் அதிசயங்களை நாசா ஆதாரத்துடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

வான்வெளியில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் இன்றளவும் அனைவருக்கும் புதிராகவே இருக்கிறது. அதேசமயம் வான்வெளியை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கு இருந்து வருகிறது.

விண்வெளியில் நடக்கும் சில அதிசய நிகழ்வுகளை அவ்வப்போது புகைப்படம் எடுத்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக வெளியிட்டது.

இதன்மூலம் விண்வெளியில் காஸ்மிக் அதிசயங்களின் ஆதாரங்கள் இருப்பது உறுதியானது. அந்த ரீல்ஸில் பரஸ்பர ஈர்ப்பு விசையால் இரண்டு விண்மீன் திரள்கள் நடனமாடுவதை நாசா காட்டியுள்ளது. இந்த நிகழ்வு விண்மீன் திரள்கள் ஒன்றாக இணைந்து ரோஜாவை உருவாக்குவது போல் தோன்றுகிறது.

இந்த காஸ்மிக் உருவாக்கம் "ஆர்ப் 273" என அழைக்கப்படுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த நாசா, "உங்கள் நாளை பிரகாசமாக்க ஒரு இனிமையான காஸ்மிக் ரோஜா" என்று கேப்ஷன் செய்திருந்தது.

பார்க்கவே மிக அழகாக இருக்கும் அந்த விண்வெளி நிகழ்வு சமூக வலைத்தளங்களில் அதிகமான பகிரப்பட்டு வருகிறது.