அலுமினியம் பேட் வைத்து விளையாடிய கிரிக்கெட் வீரர் - சர்ச்சையில் சிக்கியது யார் தெரியுமா?
அலுமினியம் பேட் வைத்து விளையாடிய கிரிக்கெட் வீரர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அலுமினியம் பேட்
ஆஸ்திரேலியாவில் கடந்த 1979ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அப்போது பேட்டிங் செய்ய வந்த பவுலர் டென்னிஸ் லில்லி, அலுமினியம் பேட் கொண்டு வந்தார்.
அப்போதைய காலகட்டத்தில் பேட் இருக்க வேண்டும் இப்படித்தான் என எந்த விதியும் இல்லை.அதனால் டென்னிஸ் லில்லி அந்த பேட்டை வைத்தே அவர் ஒரு ஓவர் விளையாடினார்.
ஆனால் ஒரு ஓவருக்கு பிறகு, பந்தின் வடிவம் மாறியுள்ளதை அறிந்த இங்கிலாந்து கேப்டன் மைக் பிரேர்லின், டென்னிஸ் லில்லி அந்தப் பேட்டை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.இதனை ஏற்க டென்னிஸ் லில்லி மறுத்தார்.
கிரிக்கெட் வீரர்
அதன்பிறகு ஆஸ்திரேலியா கேப்டன் கிரெக் சேப்பல் பேட்டை மாற்றச் சொன்னார். இதனால் கடுப்பான டென்னிஸ் லில்லி தனது அலுமினியம் பேட்டை பெவிலியனை நோக்கித் தூக்கி எறிந்தார்.இதனால் போட்டி 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு மரத்திலான பேட்டை வைத்து விளையாடத் தொடங்கினார்.இந்த விவகாரம் அன்றைய காலகட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.