சாம்பியன்ஸ் கோப்பையிலிருந்து விலகும் பாகிஸ்தான்? போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்றும் ஐசிசி
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற ஐசிசி ஆலோசித்து வருகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
அரசியல் பிரச்சினை காரணமாக 2008 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்து வந்த இந்திய அணி, இந்தியா பங்கேற்கும் போட்டிகளை வேறு நாடுகளில் நடத்த ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றம்
இந்தியா இந்த தொடரை புறக்கணித்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் எனவே இந்திய அணி ஆடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்தலாம் என ஐசிசி வேண்டுகோள் வைத்தது. ஆனால் இந்த முடிவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்தியா அணி பாகிஸ்தானுக்கு வர மறுத்தால் 2026 ல் இந்தியாவில் நடைபெற உள்ள T20 உலக கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்கும் என எச்சரிக்கை விடுத்தது. தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாகவும் பாக்கிஸ்தான் எச்சரித்து வருகிறது.
இந்நிலையில், ஹைப்ரிட் மாடலை ஏற்காமல் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து வெளியேற முடிவு செய்தால், முழு போட்டியும் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற ஐசிசி ஆலோசித்து வருகிறது.