2025 சாம்பியன்ஸ் டிராபி - இந்திய அணி கலந்து கொள்வதில் புதிய சிக்கல்?

Pakistan Indian Cricket Team Team India
By Karthikraja Jul 11, 2024 07:08 AM GMT
Report

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை நடைபெற உள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 2017 ல் கடைசியாக இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கைப்பற்றியது.  

icc champions trophy 2017

அடுத்த ஆண்டு (2025) பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை நடைபெற உள்ளது.இந்த போட்டிகளை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

பிசிசிஐ கொடுத்த கோடிகளை நிராகரித்த ராகுல் டிராவிட் - என்ன காரணம் தெரியுமா?

பிசிசிஐ கொடுத்த கோடிகளை நிராகரித்த ராகுல் டிராவிட் - என்ன காரணம் தெரியுமா?

ஐசிசி

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.  

team india

மார்ச் 1ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டியை லாகூர் மைதானத்தில் நடத்தவிருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணி பாக்கிஸ்தான் செல்ல மறுத்துள்ளதாகவும், இதனால் இந்திய அணி ஆடும் போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் 

சர்வதேச தொடர்களை தவிர, இந்தியாவும் பாகிஸ்தானும் 2012-க்கு பிறகு இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை. 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளவில்லை. 2023 ல் நடந்த ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்தியது. இந்திய அணி பாக்கிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணி ஆடிய போட்டிகள் மட்டும் ஸ்ரீலங்காவில் நடத்தப்பட்டது.

எல்லைப் பிரச்னைகள் முடியும் வரை பாகிஸ்தானுடன் இந்திய அணி இருதரப்பு போட்டிகளில் விளையாடாது என கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்திருந்தார்.