6 ஆயிரம் நாட்கள் சிறையில்...உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் தெரியுமா?
கைது செய்யப்பட்ட ஹென்றி சிறையில் மொத்தம் 6 ஆயிரம் நாட்களை கழித்துள்ளார்.
அதிக முறை சிறை
அமெரிக்க கென்டகி மாகாணத்தை சேர்ந்தவர் ஹென்றி இயர்ல் (74). இவர் உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் என பிரபலமடைந்தவர். இதுவரை அவரது வாழ்நாளில் 1,300 முறைக்கும் அதிகமாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் 18 வயதில் இருக்கும்போது, அவரது வளர்ப்பு தாய் மரணம் அடைந்து விட்டார். இந்த துக்கத்தில் ஹென்றி மது குடிக்க தொடங்கினார். முறையாக எந்த அலுவலகத்திலும் பணியாற்றியதில்லை. ஒரேயொரு முறை மோட்டல் ஒன்றில் வேலை செய்துள்ளார்.
அந்த வேலையும் அவர் குடிகாரர் என்பதால் பறிபோனது.1970-ம் ஆண்டு ஜூலை மாதம் பயேட் கவுன்டி பகுதியில் முதன்முறையாக அவர் கைது செய்யப்பட்டார். 20 வயது இருக்கும்போது ஆயுதம் ஒன்றை மறைத்து எடுத்து சென்ற குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட அவர், சிறையில் மொத்தம் 6 ஆயிரம் நாட்களை கழித்துள்ளார்.
6 ஆயிரம் நாட்கள்
அதன் பிறகு, 1000-ஆவது முறையாக 2008-ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். யாரோ ஒருவரின் வீட்டுக்கு பின்னால் மதுபோதையில் சிறுநீர் கழித்த காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. புனரமைப்பு இல்லத்தில் அனுப்பப்பட்டு தெளிவடைந்த அவர் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு 5 தசாப்தங்களில், 1,500 முறை அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என உள்ளுர் ஊடகம் செய்தி தெரிவிக்கின்றது. கடைசியாக, 2017-ம் ஆண்டு ஏப்ரலில் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கென்று குடும்பம் என எதுவும் இல்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவர் மரணம் அடைந்தார்.
ஆனால், உலகில் அதிக முறை சிறையில் வாழ்நாளை கழித்த நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அவரை குறித்து உள்ளூர்வாசிகள் கூறும்போது,வசீகரிக்க கூடிய ஒரு நபர் என்றும் சமூக விதிகளை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் சுதந்திர மனப்பான்மையுடன், தான் விரும்பியவற்றை மகிழ்ச்சியுடன் செய்ய கூடியவர் என்றும் கூறுகின்றனர்.