பெண்களை பார்த்தாலே பயம்.. 55 வருடம் வீட்டில் அடைந்து கிடந்த நபர் - இப்படியொரு வினோத பாதிப்பா?

Africa
By Vinothini Oct 15, 2023 06:34 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

நபர் ஒருவர் வினோத பாதிப்பால் 55 வருடம் வீட்டில் அடைந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினோத பாதிப்பு

ருவாண்டாவைச் சேர்ந்த கல்லிட்க்ஸ் நிசம்விட்டே என்ற நபர் தற்பொழுது 71 வயது. இவர் தனது 16 வயதில், எந்தவொரு பெண்ணையும் பார்க்க விரும்பாமல் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதோடு வெளி உலகத்திடம் இருந்து தன்னை விலக்கிக்கொள்ள அவர் 15 அடி வேலியை உருவாக்கினார். மேலும் எந்தப் பெண்ணும் வீட்டிற்குள் நுழைய முடியாதபடி அரிப்புப் பலகைகளை வைத்துள்ளார்.

71-years-old-man-having-fear-on-women

இது குறித்து அவர், "நான் இங்கே உள்ளே என்னை தனிமைப்படுத்திக் கொண்டதற்கும் என் வீட்டிற்கு வேலி வைத்திருப்பதற்கும் காரணம், பெண்கள் என்னை நெருங்கி வரக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது தான். எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தனது இளம் பருவத்தில் தனக்கு பயத்தை ஏற்படுத்தினர்" என்று அவர் கூறியுள்ளார்.

ஆண்கள் கட்டாயம் 2 திருமணம் செய்யவேண்டும்.. இல்லையெனில் சிறை தண்டனை? - எந்த நாடு தெரியுமா?

ஆண்கள் கட்டாயம் 2 திருமணம் செய்யவேண்டும்.. இல்லையெனில் சிறை தண்டனை? - எந்த நாடு தெரியுமா?

இப்படியொரு நோயா?

இந்நிலையில், அவர் 55 ஆண்டுகளாக பெண்களுக்குப் பயந்தாலும், அக்கம்பக்கத்தினர் குறிப்பாக உள்ளூர்ப் பெண்கள் மட்டுமே அவர் உயிர் பிழைக்க உதவுகிறார்கள். அவருக்குத் தேவையானதை அவர் வீட்டிற்குள் வீசுவது தான் வழக்கமாம். அதை ஆட்கள் யாரும் இல்லை என்று இருக்கும்போது வெளியே வந்து எடுத்துக்கொள்வாராம்.

71-years-old-man-having-fear-on-women

அந்த முதியவர் பெண்களின் மீதான பகுத்தறிவற்ற பயமான Gynophobia என்ற உளவியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதை சோதனை செய்வதற்கான வாய்ப்புகளை கூட அவர் தருவதில்லை, ஆனால் மருத்துவ அமைப்பில், இது “குறிப்பிட்ட பயம்” என வகைப்படுத்தப்படுத்துகின்றனர்.

அந்த பயத்தோடு இருக்கும்போது பீதி, மார்பில் இறுக்கம், அதிக வியர்வை, இதயம் வேகமாக துடித்தல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை ஏற்படும் என்று கூறுகின்றனர்.