வீட்டில் பிணமாக கிடந்த பிரபல திரைப்பட மாடல் அழகி - ரசிகர்கள் அதிர்ச்சி..!
கேரளாவில் 19 வயதில் திருமணம் செய்து கொண்ட பிரபல மாடல் அழகி ஷஹானா மர்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்தவர் ஷஹானா.இவர் பிரபல மாடல் அழகியாக வலம் வந்தார். இவர் சினமாவிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கோழிக்கோட்டை சேர்ந்த ஹாஜத் என்பவரை கடந்த ஆண்டு ஷஹானா தனது 19 வயதில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கோழிக்கோட்டில் தனது கணவர் வீட்டில் ஷஹானா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரின் கணவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தங்கள் கஷ்டடியில் எடுத்துள்ளனர்.
ஷஹானாவின் கணவர் அடிக்கடி தன் மனைவிடத்தில் சண்டை போட்டு வந்ததாக ஷஹானாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரின் உறவினர்கள் போலீசாரிடத்தில் கூறியுள்ளனர்.